சுவையான அத்தோ பேஜோ சூப் வீட்டிலேயே செய்வது எப்படி?

சுவையான அத்தோ பேஜோ சூப் வீட்டிலேயே செய்வது எப்படி? 

                                                                                          மெட்ராஸ் அத்தோ கடை     


தேவையான பொருட்கள்:

பேஜோ - 3

மிளகு - 10

தக்காளி - 1

மிளகாய் வற்றல் - 2

மஞ்சள் தூள் - சிறிதளவு

சீரகம் - 1 ஸ்பூன்

பட்டை லவங்கம் - சிறிதளவு

கடலை மாவு - சிறிதளவு

பச்சரிசி மாவு - சிறிதளவுய

சின்ன வெங்காயம் - 5

இஞ்சி - 1 துண்டு

பூண்டு பல் - 2

கொத்தமல்ல, கறிவேப்பலை - தேவையான அளவு

தனியா - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 தேக்கரண்டி


செய்முறை:

 வாழைத்தண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 2 லிட்டர் நீர் விட்டு சிறுதீயில் கொதிக்க விடவும் .

பட்டை லவங்கம், தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொறிக்கவும்.

வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.

 

‌வாழைத்தண்டு பாதி வெந்திருக்கும் போது வதக்கிய கலவையையும், பொடி செய்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும். 

‌பிறகு கடலை மாவு, பச்சரிசி மாவு தேவையான அளவு எடுத்து நன்கு கரைத்து அதில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 

‌உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு அளவை சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்கவும்.

சுவையான வழைத்தண்டு சூப் தயார்....

பேஜோவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதை சூப்பில் கலந்து குடித்தால் அவ்வளவு சுவை...

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை madrasathokadai2018@gmail.com என்ற mail id முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Comments

Popular Posts