" வீட்டிலேயே சுவையான பர்மா அத்தோ செய்வது எப்படி?" (மெட்ராஸ் அத்தோ கடை )

 

வீட்டிலேயே சுவையான பர்மா அத்தோ செய்வது எப்படி?

                        



தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 200 கிராம்

பூண்டு - 15

பெரிய வெங்காயம் – ½  kg

முட்டைக்கோஸ் - ஒரு கப்

எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

புளி கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன்

கேசரி பவுடர் - ஒரு சிட்டகை

காய்ந்த மிளகாய் துகள் - தேவையான அளவு

உடைத்த கடலைமாவு - தேவையான அளவு

பேஜோ தட்டை - 2

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக  நறுக்கி  கொள்ளவும்.

முட்டை கோஸ், மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கொத்தமல்லி பொடியாக  நறுக்கி  கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு பொன்னிறமாக  வறுத்து தனியாக வைக்கவும்.

அதேபோல் பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

காய்ந்த 30 மிளகாயை எண்ணெயில் போட்டு வறுத்துக்கொள்ளவும். அதை மிக்ஸில் போட்டு ஓரளவு தூளாக இருக்கும்படி அரைத்துக்கொள்ளவும்.

100 கிராம் உடைத்த  கடலையை தூளாக அரைத்துக்கொள்ளவும்.

முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், போட்டு வேகவிடவும். முக்கால் அளவு நூடுல்ஸ் வெந்ததும், சிறிது நேரம் மூடிவைக்கவும். பிறகு தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உடைத்த கடலை மாவு, உப்பு, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம், ஒரு நறுக்கிய  வெங்காயம், ஆகியவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக கிளறவும்.

 

பிறகு அதில் பேஜோ தட்டைகளை சிறிதாக உடைத்துப்போட்டு நன்கு ஒன்றோடு ஒன்றாக கலக்கும்படி கிளறவும்.

 

இப்போ சுவையான அத்தோ ரெடி..!

 

அத்தோவை பரிமாறி உண்ணலாம்.....

... மெட்ராஸ் அத்தோ கடை

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை madrasathokadai2018@gmail.com என்ற mail id முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Comments

Popular Posts